போயா விடுமுறை நாளில் வீட்டை சாராய கடையாக மாற்றி நபா்..! சுற்றிவளைத்த படையினரை கண்டு தப்பி ஓட்டம்..
மன்னாா்- சின்னக்கடடை பகுதியில் போயா தினமான இன்று வீட்டை மதுபான நிலையமாக மா ற்றியவரை படையினா் முற்றுகையிட்ட நிலையில் மதுபானங்களை விட்டு தப்பி ஓடியுள்ளாா்.
படைத்தரப்பினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் சின்னக்க டை பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்ற படையினர் சோதனை நடத்தினர்.
இதன்போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய வீட்டு வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மதுபானங்களை படையினர் மீட்டனர்.
எனினும் குறித்த வீட்டின் உரிமையாளர் தப்பிச் சென்றுள்ளார்.சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் மதுவரி திணைக்கள அதிகாரிகள் மதுபானங்களை மீட்டுச் சென்றுள்ளதோடு,
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.