திருமண படத்தை வெளியிட்ட ஸ்ரேயா!!
நடிகை ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணம் இருவீட்டார் முன்னிலையில் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் தனக்கு திருமணம் ஆனதை அவர் ஒப்புக்கொண்டாலும் திருமண ஒளிப்படங்களை அவர் வெளியிடவில்லை.
இந்த நிலையில் அவர் திருமண புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஒளிப்படத்தில் மணமக்கள் இருவரும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த ஒளிப்படம் தற்போது வைரலாகி வருகிறது.