SuperTopAds

ரசிகனின் குடும்பத்திற்கு பண உதவி செய்த இளைய தளபதி!!

ஆசிரியர் - Editor III
ரசிகனின் குடும்பத்திற்கு பண உதவி செய்த இளைய தளபதி!!

வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்த தனது ரசிகர் ஒருவருடைய குடுப்பத்தின் பொருளாதாரத்திற்காக இளைய தளபதி விஜய் பண உதவி செய்துள்ளார். 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி முருகன் சமீபத்தில் விபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவை அடுத்து அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டு வருவதை விஜய் இரசிகர் மன்ற நிர்வாகி மூலம் விஜய் அறிந்துள்ளார்.

இதனையடுத்து அந்த குடும்பத்திற்கு விஜய்  50, 000 ரூபாய் நிதி உதவி செய்துள்ளதாகவும் மேலும் உதவி தேவைப்பட்டால் தன்னை தாராளமாக அணுகலாம் என்றும் அவர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.