விஜய்க்கு வருமான வரித்துறை அழைப்பாணை!!

ஆசிரியர் - Editor II
விஜய்க்கு வருமான வரித்துறை அழைப்பாணை!!

இளையதளபதி விஜயை நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு வருமான வரித்துறை அழைப்பாணை விடுத்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று திஙக்கட்கிழமை நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்கும்படி விஜய்க்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

அத்தோடு சினிமா தயாரிப்பாளர் அன்புச்செழியன், கல்பாத்தி எஸ்.அகோரம், ஏ.ஜி.எஸ் நிர்வாகிகள் ஆகியோரையும் முன்னிலையாகுமாறு வருமான வரித்துறை அழைப்பாணை விடுத்துள்ளது.

‘பிகில்’ படத்திற்காக பெற்றுக்கொண்ட சம்பளம் தொடர்பாக கடந்த வாரம் நடிகர் விஜயின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜயை சென்னைக்கு அழைத்துச் சென்ற வருமான வரித்துறை, தொடர்ந்து 2 நாட்கள் இரவிரவாக விசாரணை நடத்தியது.

சோதனையில் விஜய் வீட்டில் இருந்து 77 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும் இரு வேறு விதமாக தகவல் வெளியானது. 

சோதனைக்கு பின்னர், கடந்த 2 நாட்களாக விஜய் வழக்கம்போல் படப்பிடிப்பிற்கு சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Radio
×