அஜித்தின் வலிமை படத்தின் முக்கிய அப்டேட்

ஆசிரியர் - Editor II
அஜித்தின் வலிமை படத்தின் முக்கிய அப்டேட்

அல்டிமெட் ஸ்டார் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார். நடிகை ஶ்ரீதேவியின் கணவரான போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வலிமை திரைப்படம் நவம்பர் 12-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 14 தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாட்கள் முன்னதாக, 12-ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Radio
×