நடிகர் கோபாலகிருஷ்ணன் காலமானார்

ஆசிரியர் - Editor II
நடிகர் கோபாலகிருஷ்ணன் காலமானார்

பிரபலமாக பேசப்பட்ட நாடோடிகள் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நடிகர் கோபாலகிருஷ்ணன் இன்று புதன்கிழமை காலமானார்.

சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான நாடோடிகள் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கோபாலகிருஷ்ணன். இப்படத்திற்கு பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்பட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், ஈரோடு அருகே குப்பகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று ஓய்வெடுத்து கொண்டிருந்த அவர், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 54 ஆகும். 

அவர் கடைசியாக நடித்த நாடோடிகள் 2 திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

Radio