காதலியை கரம் பிடித்த மகத்
நடிகர் மகத் தனது காதலி பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்த மகத், டுபாயில் வசிக்கும் தொழிலதிபரான பிராச்சி மிஸ்ராவை காதலித்து வந்தார். இதற்கிடையில் பிக்பொஸ் நிகழ்ச்சிக்கு சென்ற இவர் யாஷிகாவை காதலித்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், பிக்பொஸ் வீட்டில் இருந்து வெளியேறியப்பின் தனது நீண்ட நாள் காதலியான மிஸ்ராவை ஏப்ரல் மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார்.
இதனையடுத்து அவர்களின் திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றுள்ளது.