மக்கள் பீதியடைய வேண்டாம்..! பாதுகாப்பு தீவிரப்படுத்துப்பட்டுள்ளது, சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவிப்பு..
![மக்கள் பீதியடைய வேண்டாம்..! பாதுகாப்பு தீவிரப்படுத்துப்பட்டுள்ளது, சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவிப்பு..](https://jaffnazone.com/storage/images/2020/01/CollageMaker_20200127_221742450-01_1080.jpg)
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள் ளான சீன பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டி ருக்கும் நோய் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளபட்டிருப்பதாக சுகாதார பணியகம் அ றிவித்துள்ளது.
கொழும்பு வைத்தியசாலையில் சீன நாட்டுப் பெண் ஒருவர் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டது.
இந்த அறிவிப்பை அடுத்தே சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் மக்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
சீனாவிலிருந்து வருகை தந்த 43 வயதுடைய பெண்ணுக்கே கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை மாலை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.