அஜித்துடன் விரைவில் இணைந்து நடிப்பேன் -பிரசன்னா-

ஆசிரியர் - Editor III
அஜித்துடன் விரைவில் இணைந்து நடிப்பேன் -பிரசன்னா-

அல்டிமெட் ஸ்டார் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு இந்தமுறை அமையவில்லை, விரைவில் அவருடன் இணைந்து நடிப்பேன் என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் வலிமை. போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் குறித்த தகவலை படக்குழு வெளியிடாமல் வைத்துள்ளது. இதனிடையே, நடிகர் பிரசன்னா, வலிமை படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் அது உண்மையில்லை என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், இதுகுறித்து நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- “வலிமை படத்தில் அஜித்துடன் நான் நடிக்க வேண்டும் என்று பலரும் விரும்பி எனக்கு வாழ்த்து தெரிவித்தீர்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான். என்னுடைய திரை வாழ்க்கையில் மிகப்பெரிய அறிவிப்பாக இச்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். 

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பு எனக்கு இந்தமுறை அமையவில்லை. விரைவில் அஜித்துடன் இணைந்து நடிப்பேன் என்று நம்புகிறேன். அஜித்துடன் நடிக்க முடியாதது எனக்கு மிகுந்த கவலையளித்தாலும் உங்களுடைய அன்பால் இதிலிருந்து மீண்டுவிட்டேன்” என்று பிரசன்னா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு