சீரியல் நடிகை தற்கொலை முயற்சி!! -முறையற்ற நடத்தை காரணமாம்-

ஆசிரியர் - Editor II
சீரியல் நடிகை தற்கொலை முயற்சி!! -முறையற்ற நடத்தை காரணமாம்-

டிவி நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தேவதையைக் கண்டேன் சீரியலில் நடித்து வரும் ஜெயஸ்ரஸ்ரீ தற்கொலை செய்து தனது உயிரை மாய்ந்து கொள்ள முயட்சித்த போது காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

5 வயது பெண் குழந்தைக்கு தாயான அவர் ரீ.வி சீரியலில் நடித்து வருகின்றார். தனது கணவர் ஈஸ்வர் நடிகை மகாலட்சுமியுடன் தவறான உறவில் இருந்து கொண்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், தனது குழந்தையிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அவர் அடையாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

பதிவான முறைப்பாட்டின் அடிப்படையில் கைதான நடிகர் ஈஸ்வர், சில நாட்களில் பிணையில் வெளியே வந்து நிருபர்களை சந்தித்தார். அப்போது தனது மனைவிக்கும் நடிகை மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும் இடையே முறை தவறிய உறவு இருப்பதாகக் கூறினார். ஜெயஸ்ரீ - ஈஸ்வர் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறினர்.

இந்நிலையில் ஜெயலட்சுமி தற்கொலைக்கு முயல்வதை தெரிந்து கொண்டு அவரது தோழி அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

Radio