சாரதியின் முறையற்ற நடத்தை!! -நடிகை சோனம் கபூர் கவலை-

ஆசிரியர் - Editor II
சாரதியின் முறையற்ற நடத்தை!! -நடிகை சோனம் கபூர் கவலை-

லண்டனில் உபேர் டாக்சியில் பயணம் செய்தபோது சாரதியில் முறையற்ற நடவடிக்கையால் மிக மோசமான அனுபவத்தை எதிர்கொண்டதாக நடிகை சோனம் கபூர் கவலை வெளியிட்டார்.

தற்போது லண்டனில் உள்ள அவர், வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில். லண்டனில் தான் உபேர் டாக்சியில் பயணம் செய்தபோது ஓட்டுநர் நிதானமிழந்த நிலையில் கூச்சலிட்டவாறு வாகனத்தை ஓட்டியதாக தெரிவித்துள்ளார்.

ஓட்டுநரின் முறையற்ற நடவடிக்கைகளால் தான் கலங்கிப்போய்விட்டதாகக் கூறியுள்ள அவர், லண்டனில் பொதுப் போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துமாறு தனது நண்பர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Radio