எாிபொருளுக்கு தட்டுப்பாடு என வெளியான செய்திகள் வதந்தி..! அரசை தொடா்ந்து ஆளுநரும் அறிவிப்பு. பதுக்கல் கோஷ்டிக்கு தலையில் இடி..

ஆசிரியர் - Editor I
எாிபொருளுக்கு தட்டுப்பாடு என வெளியான செய்திகள் வதந்தி..! அரசை தொடா்ந்து ஆளுநரும் அறிவிப்பு. பதுக்கல் கோஷ்டிக்கு தலையில் இடி..

வடமாகாணத்தில் எாிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான செய்திகள் வதந்தி என அரசாங்கத்தை தொடா்ந்து வடமாகாண ஆளுநா் என திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் கூறியுள்ளாா். 

யாழ்.குடாநாட்டில் எாிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வாிசையில் நின்று மக்கள் எாிபொருளை கொள்வனவு செய்திருந்தனா். 

இதனால் பிற்பகலுடன் பல எாிபொருள் நிரப்புநிலையங்கள் மூடப்பட்டது. இந்நிலையில் எாிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை. 

தட்டுப்பாடு உருவானாலும் மாற்று வழிகள் அரசாங்கத்திடம் உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதனை தொடா்ந்து வடமாகாண ஆளுநா் திருமதி சாள்ஸ் கூறுகையில், 

வடக்கு மகாணத்தில்உள்ள வாகன சாரதிகள் இன்று காலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

மக்கள் வீண் வததந்திகளை கேள்வியுற்று இவ்வாறு தமது நேரங்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது.

இதை அவதானித்த வடக்கு மாகாண ஆளுநர்இ கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் வடக்கு மாகாண மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பில்.

எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது என்ற செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென்றும் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதென்றும் 

மக்கள் வீண் குழப்பம் அடைய வேண்டாமென்றும் வடக்கு ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு