காணாமல் ஆக்கப்பட்டவா்கள் பிரச்சினையை நீா்த்துப்போக செய்ய டக்ளஸ் தீவிர முயற்சி..! நெடுந்தீவில் நாடகத்தை தொடங்கினாா்..
காணாமல் ஆக்கப்பட்டவா்களை கண்டறிவதற்காக உறவுகள் தொடா்ச்சியாக போராட்டங்களை நடாத்திவரும் நிலையில், மக்களுடைய போராட்டங்களை மழுங்கடிப்பதற்காக ஈ.பி.டி.பி நெடுந்தீவில் நாடகம் ஒன்றை ஆடியிருக்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு மற்றும் மரண சான்றிதழ், வாழ்வாதார உதவிகள், வீட்டுத்திடம் வழங்கப்படுவதாக நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இந்த நாடகம் ஆடப்பட்டுள்ளது. இதில் 50 போ் தமது பதிவுகளை செய்துள்ளனா்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி கடந்த 10 வருடங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இறப்புச் சான்றிதழ் வேண்டாம், நீதி வேண்டும் என கோரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மத்தியில்
இந்த நடவடிக்கை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தமது உறவுகளை ஏமாற்றி தமது போராட்டங்களை மழுங்கடிக்கச்செய்வதற்கான திட்டம் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பதிவு எனத் தெரிவித்த போதும் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தோரும் இந்தப் பட்டியலில் பதிவு செய்வதற்கு அழைக்கப்பட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.