SuperTopAds

கன்னியா பிள்ளையாா் ஆலய விவகாரம்..! இடைக்கால தடை உத்தரவை நீடித்த நீதிபதி மா.இளஞ்செழியன்..

ஆசிரியர் - Editor I
கன்னியா பிள்ளையாா் ஆலய விவகாரம்..! இடைக்கால தடை உத்தரவை நீடித்த நீதிபதி மா.இளஞ்செழியன்..

திருகோணமலை- கன்னியா பிள்ளையாா் ஆலய விவகாரம் தொடா்பாக வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவினை மாசி மாதம் 25ம் திகதிவரை நீடித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளாா். 

கன்னியா வெந்நீரூற்று வழக்கு இன்று நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கே.சயந்தன் ஆகியோா் ஆஜராகியிருந்தனா். 

இதன்போதே இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த வழக்கு தொடர்பிலான வாதப்பிரதிவாதங்கள் தொடர்ச்சியாக இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேல் இடம்பெற்றது . கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி 

திருகோணமலை சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தார் . இவ் வழக்கில் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் , கேசவன் சயந்தன் ஆகியோர்கள் ஆஜரானதுடன், 

இடை புகு மனுதாரர் சார்பில் எஸ் . புஞ்சிநிலம் , ஏ . எஸ் . எம் . ரபீஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர் .கன்னியா வெந்நீரூற்று வழக்கில் இடைபுகுனர்கள் தொடர்பாக இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது , 

அதில் வில்கம் விகாரை விகாராதிபதி தானும் ஒரு இடைபுகு மனுதாரராக தன்னை அனுமதிக்கவேண்டும் என விண்ணப்பித்திருந்தார் . இதனை எதிர்த்து வாதாடிய மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் 

வில்கம் விகாரை விகாராதிபதிக்கு இதில் எந்தவித சட்டபூர்வமான உரித்தும் கிடையாது என தெரிவித்தார் . இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் எழுத்து மூல ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் , 

பெப்ரவரி 25ஆம் திகதி குறித்த தினத்தில் இடைபுகு சம்பந்தமான தீர்ப்பு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.