ஜனாதிபதி கோட்டா ஆட்சியில் மீண்டும் தொடங்கியது காணி பறிப்பு..! வலி,வடக்கில் 5 ஏக்கா் மக்களின் காணியை பறிக்க திட்டம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி கோட்டா ஆட்சியில் மீண்டும் தொடங்கியது காணி பறிப்பு..! வலி,வடக்கில் 5 ஏக்கா் மக்களின் காணியை பறிக்க திட்டம்..

யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் 400 மீற்றா் நீளமான பகுதியை மீள வழங்குமாறு யாழ்.மாவட்ட செயலா் என்.வேதநாயகன் பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம் எழுதியிருக்கும் நிலையில், அதனை மீறி தனியாா் காணிக்கு ஊடாக பாதை அமைக்க விமானப்படையினா் முயற்சித்து வருகின்றனா். 

விமான நிலையத்திற்கு செல்லும் 400 மீற்றா் நீளமான வீதி செப்பனிடப்படாமல் விடப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பாதையை செப்பனிட காணியை விமானப்படை வழங்கவேண்டும். என தொடா்ச்சியாக கோாிக்கை முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அங்குள்ள 11 பொதுமக்களுக்கு சொந்தமான சுமாா் 5 ஏக்கா் காணியை அபகாித்து

வீதியை அமைக்க முயற்சி எடுக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் இவ்வாறு எதேச்சையாக அபகரிக்க முயல்வதனை அரசோடு இணைந்துள்ளவர்கள் தடுக்க முன்வர வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கின்றனர். இதேநேரம் அண்மையுல் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற 

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதன் அருகே உள்ள பாதை விடுவிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர் பாதுகாப்பு அமைச்சிற்கு கடுதம் அனுப்பி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு