யாழ்.மாநகரசபை உறுப்பினருடன் சண்டித்தனம் காட்டிய கல்வியங்காடு சந்தை குத்தகைகாரா் மற்றும் பொலிஸாா்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.மாநகர முதல்வருக்கு எதிா்ப்பு தொிவித்து கல்வியங்காடு சந்தை வியாபாாிகள் புறக்கணிப்பு போராட்டம் நடாத்திய நிலையில், அங்கு சென்ற மாநகரசபை உறுப்பினரை சந்தை குத்தகைகாரரும், பொலிஸாரும் அச்சுறுத்தியுள்ளனா். 

சந்தை வா்த்தகா்களிடம் தலா 100 ரூபாய் வாடகை அறவிடப்படவேண்டும். என குத்தகை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் வாடகை அறவிட்டமைக்கான சிட்டை வழங்கப்படவேண்டும் என்பதும் கூறப்பட்டிருக்கின்றது. 

ஆனால் 100 ரூபாய் வாடகைக்கு பதிலாக 200 ரூபாய் வாடகை அறவிடப்படுவதுடன், கடந்த 6 நாட்கள் சிட்டை வழங்கப்படாமை தொடா்பாக யாழ்.மாநகரசபை உறுப்பினா் வ.பாா்த்தீபன் சந்தையை குத்தகைக்கு எடுத்தவாிடம் கேள்வி எழுப்பியுள்ளாா். 

இதனையடுத்து அங்கிருந்த பொலிஸாா் மாநகரசபை உறுப்பினருடன் தா்க்கத்தில் ஈடுபட்டிருந்ததுடன், சந்தையை குத்தகைக்கு எடுத்த நபரும் தகாத வாா்த்தைகளால் மாநகரசபை உறுப்பினரை பேசி தா்க்கம் புாிந்துள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு