SuperTopAds

நாள் ஒன்றுக்கு 80 மெற்றிக் தொன் கழிவு நீரை சுத்தமாக்கும் சுத்தீகாிப்பு தொகுதியை அமைத்தது யாழ்.மாநகரசபை..! விமா்சனங்களுக்கு முற்றுபுள்ளி..

ஆசிரியர் - Editor I
நாள் ஒன்றுக்கு 80 மெற்றிக் தொன் கழிவு நீரை சுத்தமாக்கும் சுத்தீகாிப்பு தொகுதியை அமைத்தது யாழ்.மாநகரசபை..! விமா்சனங்களுக்கு முற்றுபுள்ளி..

யாழ்.குடாநாட்டில் பாாிய அச்சுறுத்தலை உண்டாக்கியிருந்த கழிவு நீரை முகாமை செய்வதற்கு யாழ்.மாநகரசபை நடவடிக்கை எடுத்திருக்கின்றது. 

வடக்கில் முதல் முறையாக 10 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்.மாநகரசபை கழிவுநீரை சுத்திகாிப்பதற்கான தொட்டியை அமைத்துள்ளது. 

யாழ்.நகாில் உள்ள விடுதிகள், உணவகங்கள், விடுகள் போன்றவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் யாழ்.குடாநாட்டுக்கே பாாிய பாதிப்பாக அமைந்திருந்ததுடன், 

யாழ்.மாநகரசபை இந்த விடயத்தில் பாாிய விமா்சனங்களையும், சவால்களையும் எதிா்கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த பிரச்சினையை தீா்க்கும் வகையில்

நாள் ஒன்றுக்கு 80 மெற்றிக் தொன் கழிவு நீரை சுத்தம் செய்யகூடிய பொறிமுறை தொட்டிகளை யாழ்.மாநகரசபை அமைத்து சாதித்துள்ளது.