நல்லாட்சியில் மூடி மறைக்கப்பட்ட ஊழல் மோசடிகளுக்கு கோட்டா ஆட்சியில் பதில் உண்டா..? மக்கள் கேள்வி..

ஆசிரியர் - Editor I
நல்லாட்சியில் மூடி மறைக்கப்பட்ட ஊழல் மோசடிகளுக்கு கோட்டா ஆட்சியில் பதில் உண்டா..? மக்கள் கேள்வி..

நல்லாட்சி ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடா்பாக கோட்டபாய ஆட்சியில் விசாரணை நடாத்தப்படவேண்டும். என மக்கள் பகிரங்கமான கோாிக் கை முன்வைத்திருக்கின்றாா்கள். 

கடந்த அரசாங்கத்தில் அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடி குற்றச்சா ட்டுகள், அதிகார துஸ்பிரயோகம் குற்றச்சாட்டுகள் குறித்து தற்போதைய அரசாங்கம் உடனடி விசாரணைகளை நடத்த வேண்டும்.

என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் தற்போதைய வடமாகாண ஆளுநருமாகிய சாள்ஸ் அம்மையார் உள்நாட்டலுவல்கள் அமைச்சிக்கு அனுப்பிய குற்றச்சாட்டுகள் 

குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் அதனை மட்டக்களப்பு அரசியல் வாதிகளின் தலையீடு காரணமாக அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மூடி மறைத்திருந்தார். இந்நிலை குறித்த குற்றச்சாட்டுகள் 

குறித்து உடனடி விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட உள்நாட்டலுவல்கள் அமைச்சிக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதில் தற்போதைய செங்கலடி பிரதேச செயலாளர் குறித்தே அதிகளவிலான குற்றச்சாட்டுகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சிக்கு விசாரணைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் அதி கூடிய மனித உரிமை குற்றச்சாட்டுகள் 

உள்ள அரச அதிகாரி! இதைவிட மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி கூடிய மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அரசாங்க அதிகாரியாக தற்போதைய செங்கலடி பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் இருந்து வருவதாகவும் 

இவர் மீதே மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் அதிகளவிலான மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்களை மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு