யாழ்.பல்கலைகழக மாணவா்கள் கண்டுபிடித்த ரோபோக்களுடன் கிளிநொச்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மாணவா்கள் கண்டுபிடித்த ரோபோக்களுடன் கிளிநொச்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி..!

யாழ் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவர்களால் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த மாபெரும் கண்காட்சி (EXPO ARIVIYAL NAGAR- 2020 ) இன்று ஆரம்பமாகியுள்ளது.

குறித்த கண்காட்சி இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக்கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் திரு.க.கந்தசாமி கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில்

• யாழ் பொறியியல்பீட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கண்காட்சி

• இலவச மருத்துவ முகாம் (Medical Check-up and Dental Care)

• இரத்ததான முகாம்

• Battle ground Competition (For University of Jaffna, Kilinochchi Premises University Students)

• பாடசாலை மாணவர்களுக்காக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டு பல்கலைக்கழக Z Score பற்றி விளக்கமும் தனியார் கற்கை நெறிகள் பற்றிய விளக்கமாக கலந்துரையாடப்படும்..

• பாடசாலை மாணவர்களின் தொழிநுட்ப அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் Arduino பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

• வருகைதருவோர்களின் பொழுதுபோக்குகளுக்காக புகைப்பட நிகழ்வும் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இன்று ஆரம்பமான குறித்த கண்காட்சி நிகழ்வை காண்பதற்காக வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மாணவர்கள் வந்திருந்தமைகுறிப்பிடத்தக்கது. 

குறித்த கண்காட்சி நிகழ்வு இன்றும், நாளையும் 8 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை இடம்பெறவுள்ளதுடன், இவற்றை காண்பதற்கு கட்டணங்கள் அறவிடப்படாது. 

குறித்த கண்காட்சியில் குறைந் செலவிலான மனைகள் அமைத்தல், நீர் முகாமைத்துவத்தினை பேணல், நவீன நகர திட்டம், நவீன போக்குவரத்து முறைமைகள், 

ரோபோக்கள், நவீன கட்டுமான துறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் குறித்த கண்காட்சியில் பல்வேறு அம்சங்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடதக்கதாகும்.


Radio