பயங்கரவாதி சஹரான் ஹாசீமின் பயிற்சி முகாமிற்குள் நுழைந்த மா்ம நபா்கள் யாா்..? பயங்கரவாதிகளா..? இராணுவம், பொலிஸ் தீவிர விசாரணை..
புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபா்கள் நடமாடியமை தொடா்பாக மக்கள் வழங்கிய தகவலின் அடிப் படையிலேயே தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸாா் கூறியிருக்கின்றனா்.
குறித்த காணியில் பாரிய துளை ஒன்றினை இட்டு அகழ்வு பணியில் ஈடுப்பட்டுள்ளதாக காவற்துறையின் முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு அகழ்வு பணியில் ஈடுப்பட்டவர்கள் குறித்த தகவல்கள்
கிடைக்கபெறவில்லை என காவற்துறை விசாரணைக்குழுவின் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசிமின்
குழுவினர் குறித்த தோட்ட பகுதியில் பயிற்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த பகுதியில் இருந்து கடந்த வருடம் ஜனவரி மாதம் 16 ஆம் திகத அதிகளவான வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் அதனுடன் தொடர்புடைய
4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.கைது செய்யபட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.எவ்வாறாயினும் தற்போது
குறித்த லெக்டோ தோட்ட பகுதியில் அதிகளவான காவற்துறையினர் பாதுகாப்பில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.