கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

'அவளுடைய திறமையை வெளியில் கொண்டு வருவேன்' - அட்லி!

ஆசிரியர் - Admin
'அவளுடைய திறமையை வெளியில் கொண்டு வருவேன்' - அட்லி!

2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ எனும் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், அட்லி. இந்த படம் ரூ.50 கோடி வசூல் குவித்தது. 

அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’ , ‘பிகில்’ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகிக்கிறார் அட்லி.

இந்நிலையில், சமீபத்தில் விருது விழா ஒன்றில் பங்கேற்ற அட்லி, தன் மனைவியும் நடிகையுமான பிரியா குறித்து பேசியுள்ளார். 

அவர் கூறியதாவது: என் மனைவியின் திறமை என்ன என்பது எனக்கு தெரியும். கண்டிப்பாக அவர் விரைவில் திரும்ப நடிக்க வருவார். அவள் மிகவும் திறமைசாலி, அவளுடைய திறமையை வெளியில் கொண்டு வருவேன். அது கூடிய விரைவில் நடக்கும் ” என்று கூறியுள்ளார்.

Radio
×