மன்னாா் பொதுவைத்தியசாலை வைத்தியா்களின் அசமந்தம்..! சிறுவனின் காலில் இருந்த காயத்திற்குள்ளிருந்து 3 இன்ச் நீள தையல் ஊசி மீட்பு..!
மன்னாா் பொது வைத்தியசாலையில் 3 இன்ச் நீளமான தையல் ஊசி காயத்திற்குள் இருக்க வெளியே மருந்து கட்டிய சம்பவம் தொடா்பில் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனின் உறவினா் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளாா்.
அந்த பதிவை இங்கே அப்படியே பதிவிடுகிறோம். றிப்பாக் கே ஷமான் என்பவருடைய பதிவே இதுவாகும். சில தினங்களுக்கு முன்னர் எனது உறவுக்காரர் தன் மகனுக்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்துகட்டுவதற்காய்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.அப்போது அங்கு கடமையில் இருந்த ஒரு வைத்தியர் சிறுவனை பரிசோதித்துவிட்டு தையல் போட்டு மருந்தும் கட்டி அனுப்பிவிட்டார்.வீடு வந்தும் சிறுவனுக்கு கால்வழி தாங்க முடியவில்லை,
"சுல்-சுல்" என கால் குத்திக்கொண்டே இருக்க மீண்டும் வைத்தியசாலைக்கு செல்ல வழக்கம்போல வார்டில் எட்மிட்டாகி மீண்டும் மீண்டும் மருந்து கட்டப்பட்டது, ஆனாலும் நோவு குறைந்தபாடில்லை. ஆத்திரமடைந்த சிறுவனின் தாய் scan செய்து பார்க்குமாறு
வைத்தியரிடம் கூற அதுவும் செவ்வனே நடந்தேறியது. ஆனாலும் வருத்தம் கண்டுபிடிக்கப் படவில்லை. மகனின் அழுகுரலை தாங்கமுடியாத தாய் என் மகனை யாழ்ப்பாணம் அனுப்புமாறு வைத்தியரிடம் வினவ வைத்தியசாலை நிர்வாகம் ஏனோ மறுத்துவிட்டது.
பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்தமகனல்லவா? பெத்த மனம் பதர மீண்டும் கொந்தளித்து தன் சுய விருப்பத்தில் மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் கூட்டிச்சென்று மகனை யாழ்.வைத்தியசாலையில் அனுமதித்தபோது
பரிசோதித்த வைத்தியர் சிறுவனின் காலில் 3 இன்ச் நீளமான தையல் ஊசி ஒன்றை சத்திரசிகிச்சை மூலம் வெளியில் எடுத்து சிறுவனை குணப்படுத்தியனுப்பினர்.(இறைவன் அருளால்) சம்பவத்தை மன்னார் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எடுத்தியம்ப
Really sorry என்ற பதிலை சொல்லி முடித்தனர்.
(யாரையும் குறைகூறுவதற்கான பதிவல்ல. மனிதன் என்ற ரீதியில் தவறு அனைவருக்கும் ஏற்படும். நாங்களும் அவதானமாக இருப்பது நல்லதல்லவா?)