ஹப்புத்தளை விமான விபத்துக்கான காரணம் என்ன..? விமானப்படை சொல்வதென்ன..?
ஹப்புத்தளை விமான விபத்திற்கான காரணத்தை கண்டறிவதில் தொடா்ந்தும் சிக்கல் நிலவிவரும் நி லையில் நேற்றய தினம் குறித்த பகுதியில் இரசாயன பகுப்பாய்வு நடாத்தப்பட்டிருக்கின்றது.
நேற்று மாலை சம்பவ இடத்திற்கு சென்றதாக அந்த குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதனுடன் விபத்தில் உயிரிழந்த விமான படை வீரர்கள் நால்வரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
இலங்கை வான்படைக்கு சொந்தமான வை - 12 ரக இலகுரக உலங்கு வானூர்தி நேற்று காலை விபத்துக்குள்ளானது
ஹம்பாந்தோட்டை, வீரவில வாநூர்தி தளத்தில் இருந்து கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பயணித்த வேளையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறியும் வகையில், வான்படை தளபதியின் பணிப்புரைக்கு அமைய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வான்படை ஊடக பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை உயிரிழந்த வான்படை அதிகாரிகளின் சடலங்கள்
இன்றைய தினம் உறவினர்களிடம் கையளிகப்படவுள்ளன.