SuperTopAds

காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு என்ன நடந்தது..? ஆராய விசேட குழு, அமைச்சரவை அங்கீகாரம்..

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு என்ன நடந்தது..? ஆராய விசேட குழு, அமைச்சரவை அங்கீகாரம்..

காணாமல்போனவா்கள் குறித்து கடந்தகாலங்களில் கேட்டறிந்த ஆணைக்குழுக்களின் பாிந்து ரைகளின் அடிப்படையில் விசேட குழு ஒன்றை அமைத்து தீா்வினை தேடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது. 

கடற்றொழில் மற்றும் நிர்வாக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று 02.01.2020 இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான கோரிக்கை பரிசீலனைக்கு 

எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த வாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த காணாமல் போனோரின் உறவினர்கள், தமது சார்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடி 

கௌரவமான தீர்வினைப் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.இந்நிலையில் குறித்த விடயத்தினை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காணாமல் போனோரின் உறவினர்களில் பெரும்பாலானோர் 

அரசாங்கத்துடன் கலந்துரையாடி கௌரவாமான தீர்வினைப் பெற்றுக் கொள்ளத் தயராக இருப்பதாகவும், ஆனால் இந்த விவகாரத்தினை தீராத பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்ற அரசியல் கட்சிகளின் பின்னணியில் இயங்குகின்ற 

ஒரு சிறு பகுதியினரே தொடர்ந்தும் குழப்பங்களை மேற்கொண்டு வருவதாகவும் எடுத்துக் கூறினார். இதனையடுத்து இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களினால் 

பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், குறித்த விவகாரம் தொடர்பாக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உட்பட அனைத்து விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளையும் 

விரிவாக ஆராய்ந்து அதனடிப்படையில் கூடிய விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் வழங்குவதாகவும், அதற்கான குழு ஒன்றினை உடனடியாக அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.