யாழ்.ஊடக அமையத்தின் 7ம் ஆண்டு நிறைவு விழாவும், விருது வழங்கலும் நிகழ்வு..
யாழ்.ஊடக அமையத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான விருதுவழங்கும், வருடத்தின் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று யூ.எஸ் விருந்தினர் விடுதியில் நடந்தது.
கொல்லப்படட்ட ஊடகவியலாளர்களுக்கான மௌன அஞ்சலியுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வின் பொது சுடரினை ஜயாத்துரை நடேசனின் துனைவியார் ஏற்றிவைத்தார்.
இவ்விருது வழங்கும் நிகழ்வில் பொன்னையா மாணிக்கவாசகருக்கான அமரர் மயில்வாகனம் நிமலராஜன் விருதினையும், நடேசப்பிள்ளை வித்தியாதரனுக்கான
அமரர் தராசி டி.சிவராம் விருதினையும், விஸ்வராஜா காந்தகுமாருக்கான அமரர் ஜயாத்துறை நடேசன் விருதினையும் வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர்
வழங்கி வைத்தார்.சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கான அமரர் செல்வராஜா ரஜிவர்மன் விருதினை தினக்குரல் பத்திரிகையின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.கேசவராஜா வழங்கி வைத்தார்.
செல்வி சதாசிவன் சகீலாவிற்கான அமதர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்தி விருதினை வடக்கு மாகாண சபையின் பேரவை தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் வழங்கிவைத்தார்.
தர்மபாலன் ரிலக்சனுக்கான அமரர் சகாதேவன் நிலக்சன் விருதை நிலக்சனின் பெற்றோர் வழங்கிவைத்தனர். ஹாஜிமீராலெப்பை லாபீருக்கான அமரர் சுப்பிரமணியம்
சுகிர்தராஜான் விருதினை வணபிர றூபன்மரியாம்பிள்ளை வழங்கிவைத்தார்.