ஒற்றையாட்சியை விரும்பும் சிங்கள பௌத்தன் நான்..! சிங்கள மக்களுக்காக உத்தமன் வேஷத்தை கலைக்கும் சஜித்..
ஒற்றையாட்சி, பௌத்த சமயத்திற்கு முன்னுாிமை போன்றனவே தன்னுடைய கொள்கைக ள் எனவும், வெளிநாட்டு உடன்படிக்கைகளை தானும் எதிா்ப்பேன் எனவும் சஜித் பிறேமதா ஸ அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கூறியிருக்கின்றாா்.
அங்கு அவா் கூறுகையில், தேசிய ஐக்கியம், பௌத்த மத முன்னுரிமை, ஒரு மித்த நாடு ஆகியவையே தமது கொள்கையாகவும் இருந்தது.குறித்த கொள்கைகள் சிலரது தனிப்பட்ட பிரசாரங்கள் காரணமாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த காலத்தில் நாட்டின் வளங்களை சர்வதேசத்திற்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தமது தரப்பினர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆகவே எதிர்கட்சி தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள
தான் எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு பின்னர் தொடர்ந்தும் அந்த பதவியில் நீடிப்பதற்கான சந்தரப்பம் வழங்கப்படும் பட்சத்தில் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு, எக்ஸா, சோஃபா ஆகிய சர்வதேச உடன்படிக்கைகளை ரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு
ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இதற்கிடையில் முன்னாள் பிரதமர் ரணில் மற்றும், முன்னாள் அமைச்சர் சஜித் இடையிலான முக்கிய சந்திப்பு நாளை இடம்பெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.