SuperTopAds

ஊழல் பெருச்சாளியா வடமாகாண ஆளுநா்..? ஜனாதிபதி கோட்டாவின் தீா்மானத்திற்கு எதிா்ப்பு..!

ஆசிரியர் - Admin
ஊழல் பெருச்சாளியா வடமாகாண ஆளுநா்..? ஜனாதிபதி கோட்டாவின் தீா்மானத்திற்கு எதிா்ப்பு..!

மட்டக்களப்பு மாவட்ட செயலராக கடமையாற்றி பல ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் சுங்க தி ணைக்களத்தின் பணிப்பாளா் நாயகமாக இடமாற்றம் செய்யப்பட்ட திருமதி சாள்ஸ்

கோத்தா அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளராக திருமதி சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல்வேறு ஊழல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒருவரை வடக்கு மாகாண ஆளநாராக நியமிப்பதிற்கு கோத்தா அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது.

வடக்கு மாகாண ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான திருமதி சார்ள்ஸை நியமிக்க உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷவின் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்து வரும் சில தினங்களில் வட மாகாண ஆளுநராக கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில், திருமதி சார்ள்ஸ் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் 8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், வட மாகாணம் தொடர்பில் இழுபறி நிலை காணப்பட்டது.