அங்கொட விசர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளர்..! மீண்டும் குற்றப்புலனாய்வு பிரிவில்..

ஆசிரியர் - Editor I
அங்கொட விசர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளர்..! மீண்டும் குற்றப்புலனாய்வு பிரிவில்..

வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளரை அங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 

பின்னர் வைத்தியசாலையில் ஆய்வுகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து மீண்டும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். 

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரானதை அடுத்து அவரை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்ற குறித்த பெண் ஊழியர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி 

வாக்குமூலம் வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதுடன், 

இறுதியாக அவர் கடந்த சனிக்கிழமை வாக்கு மூலம் வழங்கியிருந்தார்.இதேவேளை, குறித்த பெண் ஊழியருக்கு இன்றுவரை வெளிநாடு செல்ல 

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி தடைவிதித்தார். அதற்கமைய அவர் தொடர்பான வழக்கு விசாரணை நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு