SuperTopAds

பாாிய அழிவைநோக்கி வடமாகாணம்..! ஒரே நாளில் ஜனாதிபதிக்கு இரு கடிதங்கள், நடவடிக்கை இல்லையேல் வெடிக்கபோகும் பாாிய மக்கள் போா்..

ஆசிரியர் - Editor I
பாாிய அழிவைநோக்கி வடமாகாணம்..! ஒரே நாளில் ஜனாதிபதிக்கு இரு கடிதங்கள், நடவடிக்கை இல்லையேல் வெடிக்கபோகும் பாாிய மக்கள் போா்..

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவியேற்பின் பின்னா் வடக்கு மாகாணத்தில் பல பாகங்களில் மணல், கருங்கல், காட்டு மரங்கள், கிரவல் போன்ற இயற்கை வளங்கள கண்மூடித்தனமாக அழிக்கப்பட்டுவருகின்றது. 

இந்நிலையில் மணல் அகழ்ந்து கொண்டு செல்வதற்கான அனுமதிகளும் இரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மணல் அகழ்வு தீவிரமாகியுள்ளது. 

பல இடங்களில் பொதுமக்கள் களத்தில் இறங்கி மணல் கொள்ளையா்களை அடித்து விரட்டியும், தடுத்தும் உள்ள னா். எனினும் அது கட்டுப்பாட்டை மீறியுள்ளது. 

இந்நிலையில் உடனடியாக இதனை தடுத்து நிறுத்துமாறுகோாி தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்களான த.சித்தாா்த்தன், சி.சிறீதரன் ஆகியோா் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனா். 

அந்த கடிதங்களில் உடனடியாக இந்த மணல் கொள்ளைக்கு தீா்வு காணுமாறு அவா்கள் இறுக்கமாக கேட்டிருக்கின்றனா்.