4 இராணுவ சிப்பாய்களும், ஒரு பொதுமகனும் படுகாயம்..! கட்டுப்பாட்டை இழந்த இராணுவ வாகனம்..

ஆசிரியர் - Editor I
4 இராணுவ சிப்பாய்களும், ஒரு பொதுமகனும் படுகாயம்..! கட்டுப்பாட்டை இழந்த இராணுவ வாகனம்..

ஓமந்தை- வேப்பங்குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இராணுவ வாகனம் எதிரே வந்த வாகனத்துடன் மோதியதில் 4 இராணுவ சிப்பாய்களும், பொதுமகன் ஒருவரும் படுகாயம் அடைந்திருக்கின்றனர். 

புளியங்குளம் பகுதியிலிருந்து வவுனியா திசை நோக்கிச் சென்ற இராணுவ வாகனம் ஒன்று ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் வைத்து மோட்டார் வாகனம் ஒன்றில் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்தில் நான்கு இராணுவத்தினரும், 

மோட்டார் வாகனத்தில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு