மட்டக்களப்பில் திருமணத்திற்கு சென்றபோது அணிந்திருந்த நகைகள் எங்கே..? சாவகச்சோியில் வாள்களுடன் வீடு புகுந்த கொள்ளையா்கள் அட்டூழியம்..!
சாகவகச்சோி- கோவிலாக்கண்டி பகுதியில் வீடொன்றின் புகைக்கூண்டை உடைத்து உட்புகுந்த திருடா்கள் வீட்டிலி ருந்தவா்களை மூா்க்கத்தனமாக தாக்கி 13 பவுண் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனா்.
அதிகாலை ஒரு மணியளவில் வீட்டின் புகை கூண்டை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் உரிமையாளரான கணபதிப்பிள்ளை - பத்மசீலனிடம் வீட்டின் நகைகள் பணங்களை கோரி தாக்கியுள்ளனர்.
தாக்குதல் காரணமாக சத்தம் எழுப்ப முயன்ற சமயம் அவரது வாயினை பிளாஸ்ரர் கொண்டு ஒட்டியதோடு கை இரண்டினையும் கட்டிய பின்பும் தாக்கியுள்ளனர்.
இதனால் வீட்டின் உரிமையாளரால் தப்பிச் செல்லவோ அல்லது சத்தம் எழுப்பவோ முடியவில்லை. இந்த நேரம் வீட்டிற்குள் புகுந்த ஐவர் அடங்கிய கொள்ளையர்களே மேற்படி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேநேரம் நேற்று முன்தினம் இவரது மனைவி மட்டக்களப்பில் இடம்பெற்ற ஒரு திருமண வீட்டிற்குச் சென்றுவந்த சமயம் அதிக நகைகள் அணிந்திருந்தமையினை அவதானித்து
அவை தொடர்பில் வினாவியே கொள்ளையர்கள் வீட்டின் உரிமையாளரை தாக்கியுள்ளனர். இருந்தபோதும் அவை வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்துல் வைக்கப்பட்டிருந்தமையால் சுமார் 50 பவுன் தப்பியபோதும்
அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் 5 பவுன் பதக்கம் சங்கிலியும் வீட்டில் அணிந்திருந்த 8 பவுன் நகைகளுமாக 13 பவுன் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டது.
இதன்போது கொள்ளையர்கள் நீண்ட நேரம் வீடு முழுமையாக சல்லடை போட்டு தேடுதலில் ஈடுபட்டு வீட்டில் இருந்த இரு உண்டியல் மற்றும் ஒரு தொகைப் பணம் என்பவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் பொலிசார் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சகிதம் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.