SuperTopAds

மீண்டும் இலங்கையில் பரவும் நோய்..! காய்ச்சல், உடல்வலி, சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பின் வைத்தியரை பாருங்கள்..

ஆசிரியர் - Editor I
மீண்டும் இலங்கையில் பரவும் நோய்..! காய்ச்சல், உடல்வலி, சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பின் வைத்தியரை பாருங்கள்..

இலங்கையில் இன்புளூவன்ஸா வைரஸ் தொற்று வேகமாக பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக சுகாதார அமைச்சு தக வல்கள் தொிவிகின்றன. 

இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

இன்புளூவன்ஸா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அன்டிபயட்டிக் மருந்துகளை பெறுவதில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. 

வைத்தியரை நாடி பரிசோதிக்குமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது இன்புளூவன்ஸா B என்ற வைரஸ் தொற்றே 

இவ்வாறு பரவி வருவதாக IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், உடல் வலி, சளி , இருமல் போன்றவைகளே இந்த நோயின் அறிகுறிகள் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு உரிய மருந்துகளை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் அது நிமோனியா வரை கொண்டு செல்லும் ஆபத்துக்கள் 

உள்ளதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். தும்மல் ஊடாக இந்த தொற்று மற்றவருக்கு பரவுவதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.