இலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..! அடுத்து என்ன..?

ஆசிரியர் - Editor
இலங்கைக்கான சுவிஸ் துாதுவா் அவசர அவசரமாக சுவிஸிற்கு பயணம்..! அடுத்து என்ன..?

சுவிஸ் துாதரக பணியாளா் கடத்தல் விவகாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் இலங்கைக்கான சுவிஸ் துாதுவா்  ஹேன்ஸ் பீட்டர் மொக் அவசரமாக சுவிட்ஸர்லாந்துக்கு சென்றுள்ளாா். 

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகப் பெண் பணியாளர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்சமயம் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

எனினும் இந்த சம்பவம் வெறும் நாடகம் என்று இலங்கை அரச தரப்பினர் கூறிவருகின்றனர்.இந்நிலையில், சுவிட்ஸர்லாந்திலுள்ள இலங்கையர்கள் பலரும் இதுகுறித்து 

அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு முறைப்பாடு செய்திருக்கின்றனர். இந்த முறைப்பாட்டின் படி சம்பவம் தொடர்பாக 

முழுமையான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக சுவிட்ஸர்லாந்து அரசாங்கம், இலங்கைக்கான தூதுவரை அழைத்திருப்பதாக அறியமுடிகின்றது.

Radio