பொதுமக்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்..!

ஆசிரியர் - Editor I
பொதுமக்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்..!

கிளிநொச்சி- விவேகானந்தநகர் பகுதியை சேர்ந்த இளம் பெண் தான் புற்றுநோயினால் பாதி க்கப்பட்டிருப்பதாக கூறியதால் மனிதாபிமான அடிப்படையில் உதவும் நோக்கிலேயே தாம் சிபார்சு கடிதம் வழங்கியதாக கூறியிருக்கும் நாடாளுமன் உறுப்பினர் சி.சிறீதரன், 

மற்றவர்களுடைய அனுதாபத்தை பெற்று மக்களை ஏமாற்றும் இவ்வாறான பெண்களால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படகூடாது எனவும், நடந்த சம்பவத்திற்காக தாம் வருந்துவதாகவும் கூறியிருக்கின்றார். 

குறித்த பெண்ணின் எழுத்து மூலக் கோரிக்கையின் அடிப்படையிலும், கிராம அலுவலரின் சிபாரிசுக்கமைவாகவும் அப்பெண்ணால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பகத்தன்மையுடைய நோய் நிருணய அட்டை, மருத்துவ அறிக்கைகள் என்பவற்றோடு 

யாழ்.போதனா வைத்தியசாலையை தொடர்புகொண்டு என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட விபரங்களின் அடிப்படையிலுமே அவரது நோய்நிலைமையை உறுதிப்படுத்தி அவருக்கான உதவிகளை வழங்குமாறு உதவும் நான் கோரியிருந்தேன்.

கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தான் வாழும் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாகவும், தனது உயிரைக்காக்க உதவி செய்யுமாறும் 

உரிய மருத்துவச் சான்றிதழ்களையும் சமர்ப்பித்து என்னிடம் கோருகின்ற போது அதனை நம்பாமலோ, மனிதாபிமான ரீதியிலான உதவிகளை மேற்கொள்ளாமலோ இருக்க முடியாது. இருதய சத்திரசிகிச்சைக்காக, சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்காக 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 1000 இற்கும் அதிகமானோர் பதிவுகளை மேற்கொண்டு காத்திருக்கின்ற சூழ்நிலையில் அவர்களுக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு காலதாமதம் ஏற்படுமிடத்து அக் கால இடைவெளிக்குள் எத்தனையோ பேர் 

இறந்து போவதற்கான வாய்ப்புக்கள் மிகக்கூடுதலாக உள்ளன. இவ்வாறான இறப்புக்களுக்கு ஒரு வகையில் நாமும் பொறுப்பாளிகளே! நான் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கின்ற கடந்த ஒன்பது ஆண்டுகளில் இருதய அறுவைச்சிகிச்சை, 

சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை, னுயைடலளளை போன்றவற்றுக்காக கனடா செந்தில்க்குமரன் நிதியம், கனடா வாழ வைப்போம் அமைப்பு உள்ளிட்ட பல புலம்பெயர் உறவுகளிடம் நம்பிக்கையின் அடிப்படையிலும், மனிதாபிமான ரீதியாகவும் 

என்னால் உதவி பெற்றுக்கொடுக்கப்பட்ட எத்தனையோ பேர் தமது சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்து எங்கள் மத்தியில் இன்றும் உயிரோடு வாழ்ந்து வருகிறார்கள்.அதே அடிப்படையிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி 

என்னிடம் உதவி கோரிய ராகினி தனபாலசிங்கம் என்ற பெண்ணுக்கும் உதவி வழங்க முன்வருமாறு என்னால் கோரப்பட்டது. ஒரு மக்கள் பிரதிநிதியாக இம் மோசடிச்சம்பவம் எனக்கு நேர்ந்துள்ள முதல் அனுபவம். இதுவரை காலமும் உதவிக்காக 

என்னால் சிபாரிசு செய்யப்பட்டவர்களை உதவுபவர்கள் நேரடியாக தொடர்புகொண்டு, அவர்களது சொந்த வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புவதற்கான ஏற்பாடுகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருபோதும் இப் பணப்பரிமாற்றங்கள் 

எனக்கூடாக நடைபெறுவதில்லை என்பதையும் இந்த இடத்திலே தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதேவேளை போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து பணமோசடியில் ஈடுபட்ட இப்பெண்ணின் செயலால் உண்மையாகவே 

பாதிக்கப்பட்ட இந்த மாவட்ட மக்களை புறக்கணிக்கின்ற சூழல் ஒருபோதும் ஏற்படாது என்பதுடன், என்மீதான நம்பிக்கையின் அடிப்படையில் எனது கோரிக்கையை ஏற்று உதவிபுரிகின்ற புலம்பெயர் உறவுகளுக்கு நான் எப்போதும் நன்றியும், 

விசுவாசமும் கொண்டிருப்பேன் என்பதையும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு