SuperTopAds

3 வது தடவையாகவும் குற்ற புலனாய்வு பிரிவில் சுவிஸ் தூதரக பணியாளர்..! விடாப்பிடியாக நிற்கிறது அரசு.

ஆசிரியர் - Editor I
3 வது தடவையாகவும் குற்ற புலனாய்வு பிரிவில் சுவிஸ் தூதரக பணியாளர்..! விடாப்பிடியாக நிற்கிறது அரசு.

வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் பணியாளர் 3வது தடவையாகவும் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றார். 

வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்றய தினம் 2வது தடவையாக குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறிதத பெண் 3வது தடவையாக இன்று காலை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 

கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கையைச் சேர்ந்த பெண் ஊழியர், பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பதை 

துல்லியமாக கண்டறிய நேற்றைய தினம் அவர் விஷேட சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அத்துடன் அவரிடம் நேற்றும் நேற்றுமுன்தினம் கொழும்பு கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடியில்

வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.