தோல்வியை ஒப்புக்கொண்டு விடைபெற்றார் சஜித்..! கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு வாழ்த்துக்களை கூறினார்..

ஆசிரியர் - Editor I
தோல்வியை ஒப்புக்கொண்டு விடைபெற்றார் சஜித்..! கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு வாழ்த்துக்களை கூறினார்..

ஜனாதிபதி தேர்தலில் தன்னுடைய தோல்வியை ஒப்புகொண்டுள்ள சஜித் பிறேமதாஸ வெற்றிபெற்ற வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை கூறி விடைபெற்றதுடன் ஐ.தே.கட்சி பிரதி தலைவர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் 50 வீதத்தைக் கடந்து வெளியிடப்படும் நிலையில் கோத்தாபய ராஜபக்சவின் வெற்றி உறுதியாகியுள்ளது.சஜித் பிரேமதாச தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியைத் துறக்கவுள்ளதாகத் தீர்மானித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாகவும், வெற்றிபெற்றுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அறிவித்துள்ளார்.தோல்விக்குப் பொறுப்பேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் பதவியில் இருந்து 

விலகிக் கொள்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளதாகவும், எவ்வாறாயினும் மக்களை சேவையை தொடரவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு