அடுத்த ஜனாதிபதி யாா்..? நாளை மாலை அறிவிக்கப்படும்.. தோ்தல் ஆணையாளா் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
அடுத்த ஜனாதிபதி யாா்..? நாளை மாலை அறிவிக்கப்படும்.. தோ்தல் ஆணையாளா் அறிவிப்பு..

ஜனாதிபதி தோ்தல் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்ப ட்டிருக்கும் நிலையில், நாளை மாலை ஜனாதிபதி யாா் என்பது அறிவிக்கப்படும் என தோ்தல் ஆணைக்குழுவின் தலைவா் மஹிந்த தேசப்பிாிய கூறியுள்ளாா். 

மேலும் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பணி இன்று நள்ளிரவுக்கு முன் ஆரம்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இரவு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் 

இதனைத் தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. அதனையடுத்து இன்று மாலை 5.15 மணியளவில் தபால்மூல வாக்குகளை 

எண்ணும் பணிகள் ஆரம்பமாகின. தற்போது இன்றை வாக்குப் பதிவின் வாக்குகளும் எண்ணப்படுகின்றன.வரலாற்றில் முதல்தடவையாக அம்பாந்தோட்டையில் 85 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. 

மன்னாரில் குறைவான வாக்குப்பதிவாக 62 சதவீதம் காணப்படுகிறது. நாடுமுழுவதும் ஒட்டுமொத்தமாக 80 சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.இந்த நிலையில் தபால்மூல வாக்களிப்பின் இரத்தினபுரி மாவட்ட முடிவு 

இன்று நள்ளிரவுக்கு முன் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் நாளை மாலை வெற்றிபெறும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் அவர் நாளைமறுதினம் 

திங்கட்கிழமை காலையில் பதவி ஏற்க முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு