SuperTopAds

யாழ்.தோ்தல் மாவட்டத்தில் அமைதியான தோ்தல், வன்செயல்கள் எவையுமில்லை..! 66.58 வீத வாக்கு பதிவு..

ஆசிரியர் - Admin

ஜனாதிபதி தோ்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் மிக அமைதி யான தோ்தல் நடைபெற்று முடிந்துள்ளதாக கூறியிருக்கும் யாழ்.மாவட்ட தோ்தல் தொிவத்தாட்சி அலுவலா் என்.வேதநாயகன், 

யாழ்.தோ்தல் மாவட்டத்தில் இம்முறை 66.58 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருப்ப தாகவும், 631 வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்கு பெட்டிகள் மத்திய வாக்கெண்ணும் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளாா். 

யாழ்.தோ்தல் மாவட்டத்தில் எந்தவொரு வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை. என தோ்தல் தொிவத்தாட்சி அலுவலா் என்.வேதநாயகன் கூறியுள்ளாா். ஜனாதிபதி தோ்தலுக்கான வாக்களிப்பு இன்று 631 வாக்களிப்பு நிலையங்களில் 

காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்களிப்பு ஆரம்பமானது. மாலை 5 மணிக்கு வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில், வாக்கெண்ணும் மத்திய நிலையமான யாழ்.மத்திய கல்லுாாிக்கு பலத்த பாதுகாப்புடன் 

வாக்கு பெட்டிகள் எடுத்துவரப்பட்டது. குறிப்பாக யாழ்.தீவக பகுதிகளில் அமைக்கப்பட்ட 9 வாக்கு சாவடிகளில் இருந்து கடற்படையின் உதவியுடன் வேக படகுகளிலும், நெடுந்தீவிலிருந்து விமானப்படை உலங்கு வானுாா்தியின் 

மூலமாகவும் வாக்கு பெட்டிகள் எடுத்துவரப்பட்டிருந்தது. யாழ்.மாவட்டத்தில் நண்பகல் கடுமையான மழை பெய்த நிலையில் வாக்களிப்பு சடுதியாக குறைவடைந்தபோதும், மாலையில் வாக்களிப்பு வேகமாக நடைபெற்றது. 

மேலும் மாவட்டத்தில் எங்கும் வன்செயல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. ஆங்காங்கே வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் கட்சிகள் தமது சின்னத்தை அச்சிட்ட கடதாசி துண்டுகளை பெருமளவில் வீசி சென்றிருந்தன. 

எனினும் பாாியளவிலான முறைகேடுகள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை. இந்நிலையில் யாழ்.மாவட்ட தோ்தல் தொிவத்தாட்சி அலுவலா்என்.வேதநாயகன் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில், 

யாழ்.மாவட்டத்தில் 4 லட்சத்து 75 ஆயிரத்து 176 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை இடம்பெற்ற வாக்கு பதிவில் 66.58 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது. 

மேலும் யாழ்.மாவட்டத்தில் எந்தவிதமான வன்செயல்களும் இடம்பெறவில்லை. மிக அமைதியாக இடம்பெற்றது என்றாா்.