கார் விபத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு!

ஆசிரியர் - Admin
கார் விபத்தில் பிரபல பாடகி உயிரிழப்பு!

பிரபல மராத்தி பாடகி கீதா மாலி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதிய விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.

பிரபல மராத்தி பாடகி கீதா மாலி. இவர் திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். தனியாக இசை ஆல்பங்களையும் வெளியிட்டு இருக்கிறார். நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக சமீபத்தில் கீதா மாலி அமெரிக்கா சென்று இருந்தார். அங்கிருந்து மும்பை திரும்பிய அவர் நாசிக் நகருக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

அவருடைய கணவர் விஜய்யும் அதே காரில் இருந்தார். தானே மாவட்டத்தில் உள்ள சாஹப்பூர் என்ற இடத்தில் அதிகாலை 3 மணிக்கு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் திடீரென்று மோதியது.

 இந்த விபத்தில் கீதாவும், அவரது கணவரும் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பாடகி கீதா மாலி இறந்துபோனார். அவரது கணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கீதா மாலி மறைவுக்கு மராத்தி பட உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Radio
×