35 ஜனாதிபதி வேட்பாளா்கள் பிரச்சாரத்திற்காக செலவிட்டுள்ள பணம் 10 ஆயிரம் மில்லியன் ரூபாய்..!
ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடும் 35 வேட்பாளா்களும் 10 ஆயிரம் மில்லியன் ரூபா ய் பணத்தை தோ்தல் பிரச்சாரத்திற்காக செலவிட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டிருக்கின்றது.
நாளை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மொத்த செலவு 5500 மில் லியன் ரூபா எனவும் அதனடிப்படையில் ஒரு வாக்காளருக்காக இம்முறை தேர்தல்கள் ஆணைக்குழுவால் 344 ரூபா செலவிடப்படுவதாக
மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அவர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்துக்கு செலவிட்டதாக மதிப்பிடப்படும் மொத்த தொகை
10 ஆயிரம் மில்லியன் ரூபாவாகும். அதன்படி ஒரு வாக்காளர் தொடர்பில் வேட்பா ளர்கள் செலவிட்ட தொகை 625 ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ தகவல்களின் பிரகாரம்,
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் மொத்த செலவு 715 மில்லியன் ரூபாவாகும். அப்போது ஒரு வாக்காளருக்கு செலவிடப்பட்ட தொகை 54 ரூபாவாகும். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக 1856 மில்லியன் ரூபாவை
தேர்தல்கள் திணைக்களம் செலவிட்டுள்ளது. இதன்போது வாக்காளர் ஒருவருக்கு 132 ரூபா செலவாகியுள்ளது. அதனடிப்படையில் 2015 ஆம் ஆண்டில் 2706 மில்லியன் ரூபாவை தேர்தல்கள் திணைக்களம் ஜனாதிபதித் தேர்தலுக்காக
செலவிட்டுள்ள நிலையில், அப்போது ஒரு வாக்காளருக்காக 180 ரூபா செலவிடப்பட் டுள்ளது. இந்நிலையிலேயே இம்முறை ஜனாதிபதித் தேர்தல் செலவீனம் 5500 மில் லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன்,
வாக்காளர் ஒருவருக்கான செலவு 344 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்பாளர்களும் தேர்தல்கள் ஆணைக் குழுவும் ஒரு வாக்காளருக்காக செலவிட்ட மொத்த செலவு 965 ரூபாவாகும்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.