SuperTopAds

150 சீன கடற்படை வீரா்களுடன் கொழும்புக்கு வந்துள்ள சீன போா்க் கப்பல்..!

ஆசிரியர் - Editor I
150 சீன கடற்படை வீரா்களுடன் கொழும்புக்கு வந்துள்ள சீன போா்க் கப்பல்..!

ஜனாதிபதி தோ்தலுக்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக் கும் நிலையில் சீனா நாட்டு போா் கப்பல் ஒன்று 150 சீன கடற்படை அதிகாாிகளுடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருக்கின்றது. 

இலங்கை கடற்படையினருடன் பயிற்சிகளில் ஈடுபடவுள்ள சீனக் கடற்படையினர், தொடர்ந்து 19ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளனர் என இலங்கை கடற்படையின் 

ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்புத் துறைமுகத்தை இன்று பகல் 150 அதிகாரிகளுடன் வந்தடைந்த சூ.கே சென் கப்பலுக்கு இலங்கை கடற்படையின் சம்பிரதாயத்திற்கு அமைய வரவேற்பளிக்கப்பட்டது.

தொடர்ந்து சீன கடற்படையின் கடல் அளவீட்டுப் பிரிவின் பிரதி கட்டளைத்தளபதி சிரேஷ்ட கப்டன் ஜேன் பொருனை இலங்கையின் மேற்கு கடற்படையின் பொறுப்பாளரான கட்டளைத்தளபதி 

ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க வரவேற்றார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. பின்னர் இருநாட்டுக் கடற்படையினரது நினைவுக்காக நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

129 மீட்டர் நீளம் கொண்ட சீன கடற்படைக்குச் சொந்தமான சூ.கே சென் என்கிற கப்பலில் 4900 டொன் சுமையளவு உள்ளதோடு தொடர்ந்து 06 நாட்கள் இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும்.