SuperTopAds

யாழ்ப்பாணம் தோ்தல் மாவட்டத்தில் மிக அமைதியாக தோ்தல் நடக்கும்..! தொிவத்தாட்சி அலுவலா் கருத்து..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் தோ்தல் மாவட்டத்தில் மிக அமைதியாக தோ்தல் நடக்கும்..! தொிவத்தாட்சி அலுவலா் கருத்து..

யாழ்ப்பாணம் தோ்தல் மாவட்டத்தில் மிக அமைதியான தோ்தலை நடாத்துவதற்கான ஒழுங்குகள் அனைத்தும் செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் யாழ்.மாவட்ட தோ்தல் தொிவத்தாட்சி அலுவலா் என்.வேதநாயகன், 

மாவட்டத்தில் இதுவரை 40 தோ்தல் முறைகேடுகள் தொடா்பான முறைப்பாடுகள் எம க்கு கிடைத்துள்ளபோதும் அவை பாரதுாரமான முறைப்பாடுகள் அல்ல. அவை சாதா ரணமான முறைப்பாடுகள் எனவும் கூறியுள்ளாா். 

தோ்தல் நிலமைகள் குறித்து இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும்போ தே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், யாழ் ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 631 வாக்களிப்பு நிலையங்கள் 

மைக்கப்பட்டிருக்கின்றது. யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் 9 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. நாளை காலை 9 மணிக்கு யாழ்.மத்திய கல்லூரியில் இருந்து வாக்கு பெட்டிகள் 

வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவிருக்கின் றது. அதேபோல் வாக்களிப்பு நிறைவடைந்தவுடன் தீவகத்திலிருந்து கடற்படை படகுகள் மூலமாகவும், ஹெலி கொப்ட்டர் மூலமாகவும் எடுத்துவரப்படவுள்ளது.

கடந்தகாலத்தைபோல் சுமுகமான தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் 12 பெருவலயங்களாக பிரிக்கப்பட்டு 12 உப தெரிவத்தாட்சி அலுவலர்கள் 

நியமிக்கப்பட்டுள்ளதுடன், 71 வலயங்களாகவும் பிரிக்கப்பட்டு 71 உப தெரிவத்தாட்சி அலுவலர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மத்திய கல்லூரி வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செய ற்படவுள்ளது. 

33 வாக்கெண்ணும் நிலையங்களும், 11 தபால்மூல வாக்கெண்ணும் நிலை யங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவதை எமது தேர்தல் மாவட்டத்தில் பாரியளவிலா ன தேர்தல் வன்செயல்கள் பதிவாகவில்லை.

40 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றபோதும் அவற்றில் 26 முறைப்பாடுகள் துண்டு பிரசுர ங்கள், பதாகைகள் தொடர்பானவையும், மிகுதி முறைப்பாடுகள் இடமாற்றம் போன்ற வி டயங்கள் குறித்த சிறிய முறைப்பாடுகளாக உள்ளன. 

எமது மாவட்டத்தில் சுமுகமான தேர்தல் நடைபெறும். வாக்களிக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.எமது மக்கள் வாக்களிக்கும் தமது உரிமையை சரியாக பயன்படுத்தி கட்டாயம் வாக்களி க்கவேண்டும் என்றார்.