திருமதி. நாகேஸ்வரி கதிர்காமத்தம்பி (ஓய்வு பெற்ற ஆசிரியை இளவாலை )
பிறந்த இடம்: இளவாலை வடக்கு வாழ்ந்த இடம்: இளவாலை வடக்கு
இளவாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகேஸ்வரி கதிர்காமத்தம்பி நேற்று 11.11.2019 திங்கட்கிழமை இலுப்பையடி ஞானவைரவர் திருப்பாதம் சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இளையபிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும் காலஞ்சென்றவர்களான நாகமுத்து கயிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், கதிர்காமத்தம்பி (ஓய்வு பெற்ற சீமெந்து கூட்டுத்தாபன ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும், இராசம்மா (நேர்வே), இராசேந்திரம் (உப தவிசாளர் வலிகாமம் வடக்கு பிரதேச சபை), சின்னத்துரை (மாதகல்), நகுலேஸ்வரி (பிரான்ஸ்), ஸ்ரீகரன் (கொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், நவரூபன் (யூனியன் வங்கி சுன்னாகம்) பிருந்தா (ஆசிரியை யா/இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயம்), ஷெயந்தா (ஆசிரியை வவுனியா மதீனா வித்தியாலயம்), ஜெகரூபன் DFCC, வங்கி வெள்ளவத்தை), ஆகியோரின் பாசமிகு தாயாரும், பவானி (ஆசிரியை யா/மட்டுவில் தெற்கு அ.மி.த.க.பாடசாலை), செந்தமிழ்ச்செல்வன் (சசி மூளாய்), பகீரதன் (ஆசிரிய ஆலோசகர், வவுனியா வடக்கு கல்வி வலயம்), அனுஷா Research Station Consultancy), ஆகியோரின் அன்பு மாமியும், மிதுர்ஷாளினி, டினுர்ஷாளினி, சயிந்தவி, நர்த்தனா, அஸ்விகன், ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்..
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 13.11.2019 புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்.
குடும்பத்தினர்
இளவாலை வடக்கு இளவாலை
0094 212211965, 0094 773095952
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் ஜெகரூபன் குடும்பத்தினருக்கு யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.