நீங்கள் கன்னி தன்மையுடன் இருக்கிறீா்களா..? ரசிகாின் கேள்விக்கு பதில் கொடுத்த நடிகை நிவேதா தோமஸ்..

ஆசிரியர் - Editor
நீங்கள் கன்னி தன்மையுடன் இருக்கிறீா்களா..? ரசிகாின் கேள்விக்கு பதில் கொடுத்த நடிகை நிவேதா தோமஸ்..

பிரபல நடிகை நிவேதா தோமஸிடம் நீங்கள் கன்னி தன்மையுடன் இருக்கிறீா்களா? என ரசிகா் ஒருவா் எழுப்பிய கேள்விக்கு நடிகை நிவேதா காட்டமான பதிலை வழங் கியிருக்கின்றாா். 

நேரலையில் ரசிகர்களை சந்திக்க இருந்த பிரபல நடிகையிடம் ரசிகர் ஒருவர் ஆர் யு வெர்ஜின் எனக் கேட்க...அவர் சொன்ன பதிலால் வாயடைத்துப் போனார் கேள்வி கேட்ட இளைஞர்.

பாபநாசம் படத்தில் கமலஹாசனின் மகளாக நடித்து பேமஸானவர் நிவேதா தாமஸ். இவர் கடந்த 2008ல் விஜய் நடித்த குருவி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 

தொடர்ந்து நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம் படங்களிலும் நடித்தவர் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்திலும் நடித்திருக்கிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் ஷாட்டில் ரசிகர்களிடம் பேசினார். அதில் அவரிடம் ரசிகர்கள்..எப்போது கல்யாணம்? என்னை கட்டிக்குறீங்களா? நீங்கள் கன்னித்தன்மையோடுதான் இருக்கிறீர்களா? 

என்ற தொணியிலேயே கேள்விகள் வந்தன. இதனால் கடுப்பான நிவேதா தாமஸ், ‘’நடிகைகளுக்கு ரெஸ்பெக்ட் கொடுங்கள். நீங்கள் ஒரு சக மனுஷியிடம் பேசுகிறீர்கள் என புரிஞ்சுகிட்டு பேசுங்க.

 கொஞ்சம் மரியாதையோடவும், கண்ணியத்தோடவும் இருங்க. மத்தபடி உங்களின் நேரத்தை எனக்காக செலவு செஞ்சதுக்கு நன்றி”என சொல்லி இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம் என எண்ட் கார்ட் போட்டுள்ளார்.

Radio
×