யாழ்.மணியந்தோட்டத்தில் தொடா் களவு..! காத்திருந்த இளைஞா்களிடம் மாட்டிய திருடா்கள் அடித்து நொருக்கப்பட்டனா்..

ஆசிரியர் - Editor
யாழ்.மணியந்தோட்டத்தில் தொடா் களவு..! காத்திருந்த இளைஞா்களிடம் மாட்டிய திருடா்கள் அடித்து நொருக்கப்பட்டனா்..

யாழ்ப்பாணம்- மணியந்தோட்டம் பகுதியில் தொடா்ச்சியாக திருட்டு சம்பவங்கள் இ டம்பெற்றுவந்த நிலையில் நேற்றய தினம் இரவு திருடா்களுக்காக காத்திருந்த இளை ஞா்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்த பின் பொலிஸாாிடம் ஒப்படைத்தனா். 

குறித்த பகுதியில் தொடா்ச்சியாக இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற் றுவந்த நிலையில் இந்த திருடா்களை பிடிக்கவேண்டும் என்பதற்காக மணியந்தோட் டம் இளைஞா்கள் பதுங்கி காத்திருந்தனா். இந்நிலையில் பட்டா வாகனத்தில்

வந்த திருடா்களை திருட்டு பொருட்களுடன் இளைஞா்கள் மடக்கி பிடித்துள்ளனா். இதனையடுத்து நையப்புடைத்த இளைஞா்கள் 3 இளைஞா்களில் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னா் குழந்தை பிறந்துள்ளதுடன், களவுக்காக வந்தது 

தொியாமல் அவா் கள்ளா்களுடன் சோ்ந்து வந்துள்ளதை உறுதிப்படுத்திய இளைஞா் கள், அவரை போக அனுமதித்துவிட்டு மற்றய இரு கள்ளா்களையும் பொலிஸாாிடம் ஒப்படைத்திருக்கின்றனா். பொலிஸாா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா். 

Radio
×