ஐதேகவின் கொழும்பு கோட்டையை உடைத்தெறிவோம்! - பசில்

ஆசிரியர் - Admin
ஐதேகவின் கொழும்பு கோட்டையை உடைத்தெறிவோம்! - பசில்

கொழும்பு மாவட்டம் ஐக்­கி­ய­ தே­சிய கட்­சிக்கு உரித்­து­டை­யது என்ற பாரம்­ப­ரியம் இம்­முறை மாற்­றி­ய­மைக்­கப்­படும். தலை­ந­கரின் அனைத்து தேர்தல் தொகு­தி­க­ளையும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கைப்பற்றி பல­மான ஆட்­சி­ய­மைக்கும் என பொது ஜன பெர­மு­னவின் ஸ்தாபகர் பசில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ் வில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

பொது­ஜன பெர­முன தனித்து ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­ட­வில்லை. அனைத்து கட்­சி­களின் ஆதர­வு­டனே போட்­டி­யி­டு­கின்றோம். எம்­முடன் இணைந்துக் கொண்­டுள்­ள­வர்கள் அனை­வ­ரையும் பொது­வா­கவே மதிப்­பி­டுவோம். சுதந்­திர கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்தும் நோக்கம் எமக்கு கிடை­யாது. சுதந்­திர கட்­சியை நாங்கள் பாது­காப்போம்.

2015 ஆம் ஆண்டு அர­சியல் ரீதியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட தவ­றான தீர்­மா­னங்­க­ளி­னா­லேயே பொது­ஜன பெர­மு­னவை தோற்­று­வித்து இன்று அர­சி­யலில் பல­மாக உள்ளோம். இது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கு எதி­ரான செயற்­பாடு அல்ல.

ஐக்­கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்­டத்­திற்கு உரி­யது என்று குறிப்­பி­டப்­படு­கின்றது. இது வரலாற்று ரீதியி லான உண்மை ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொழும்பு மாவட்டத்தின் அனைத்து தேர் தல் தொகுதிகளையும் கைப்பற்றி தலை நகரினையும் கைப்பற்றும் என்பதை உறுதியுடன் குறிப்பிட்டுக்கொள்கின்றேன் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு