நீராவியடி பிள்ளையார் ஆலய குழப்பங்களின் பின்னணியில் கிறிஸ்த்தவ அடிப்படைவாத அமைப்பாம்..! உளறும் ஞானசார தேரர்.
முல்லைத்தீவு- நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் உண்டான குழப்பங்கள் மற்றும் இந் து- பௌத்த சமயங்களுக்கிடையிலான முறுகல் நிலைகளுக்கு பின்னணியில் கிறிஸ்த்தவ அடிப்படைவாத அமைப்பே உள்ளது.
மேற்கண்டவாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள தருணத்தில் தேர்தல் பிரசார மேடைகளில் மதகுருமார்கள் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் குறிப்பாக பௌத்த பிக்குகள் சிலர் கருத்துகளைத் தெரிவிப்பது பௌத்த மத கோட்பாடுகளுக்கு முரணானதாக காணப் படுகின்றன. அரசியல் தேவைகளுக்கு மாத்திரம் மதக் கருத்துகள் தற்போது பாவ னைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றமை வருந்தத்தக்கது.
நாட்டில் அடிப்படைவாதம் தோற்றம் பெற்றுள்ளது என்றும் அதற்கு அரசியல்வாதி களின் ஆதரவு காணப்படுகின்றது என்றும் பல முறை எடுத்துரைத்தும் நாங்கள் இன வாதிகளாகவும் மதவாதியாகவும் விமர்சிக்கப்பட்டோம்.
பௌத்த மதத்துக்கு எதிராக திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொண்டு வரும் சதிகள் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக தீர்வு நிலையை அடையும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. நாட்டில் 7000 பௌத்த விகாரைகள் காணப்படுகின்றன.
அனைத்து பௌத்த துறவிகளும் எந்த அரசியல்வாதிகளுக்கும் அரசியல் கருத்துகளுக்கும் அடிபணியாமல் பௌத்த மதக் கோட்பாடுகளுக்கு செவி சாய்த்து அரசியல் ரீதியில் ஒரு தீர்மானத்தை முன்னெடுத்தால்
பௌத்த மதத்தை எவ்வித ஆக்கிரமிப்புகளும் இன்றி பாதுகாக்க லாம்.பல்லின மக்கள் வாழும் சமூகத்தில் அனைவரது மதச் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும். இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் இந்து ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்கள்
தங்களின் மதக் கொள்கைகளை முறையாக முன்னெடுத்துச் செல்கின்றார்கள். ஆனால் பௌத்தமதக் கொள்கைகள் ஆரோக்கியமான முறையில் போஷிக்கப்பட வில்லை.பௌத்தமதம் எந்தளவிற்கு இன்று சவால்களை எதிர்கொண்டுள்ளது.
என்பது முல்லைத்தீவு நீராவியடி விவகாரத்தின் ஊடாக வெளிப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு நீராவியடி பிரதேசத் தில் 93 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிறிய பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வளவில் இருந்த ஒரு பிள்ளையார் சிலையை விகாராதி பதி விகாரைக்குள் வைத்துள்ளார். காலப்போக்கில் இந்தப் பிள்ளையார் சிலை விடயத்தில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடும் போக்குடன் செயற்பட்டார்.
நீராவியடி பிள்ளையார் வளாகத்தில் பௌத்த பிக் குவின் உடல் தகனம் செய்யப்பட்டமையைத் தொடர்ந்து இந்து– பௌத்த மதங்களுக் கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னணியில் கிறிஸ்தவ மத அடிப்படைவாதமே செல்வாக்கு செலுத்தியது.
ஏப்ரல் 21 தின குண்டுத் தாக்குதலுக்குப் பின் இந்துக்களும் பௌத்தர்களும் ஒற்றுமையாகச் செயற்பட்ட மைக்கு எதிராகவே கிறிஸ்தவ அடிப்படை வாதம் அரசியல் அடிப்படைவாதிகளுடன் பிரச்சினைகளைத் தோற்றுவித்தது என்றார்.