அமலாபால் நடித்த “ஆடை” படம் ஹிந்தியில் றீமேக்..! கங்கனா நடிக்கிறாரா..?

ஆசிரியர் - Editor
அமலாபால் நடித்த “ஆடை” படம் ஹிந்தியில் றீமேக்..! கங்கனா நடிக்கிறாரா..?

நடிகை அமலாபால் நடிப்பில் பெரும் எதிா்பாா்ப்புக்கு மத்தியில் வெளியாகி பின்னா் புஸ்வானமான “ஆடை” திரைப் படத்தின் ஹிந்தி றீமேக்கில் கங்கணா ரணவத் நடிப்பதாக கூறப்படடிருந்தாலும் அது வதந்தி என தொியவந்துள்ளது.

விமர்சன ரீதியாக இந்த படம் எல்லோரிடம் பெரிய வரவேற்ப்பை பெற்ற படம்ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால், கதையின் நாயகியாக நடித்த படம் ‛ஆடை’. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கட்டடத்தில் 

ஆடையின்றி நிர்வாணமாக மாட்டிக் கொள்ளும் ஒரு பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தான் படத்தின் கதை. இதில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருந்தார்.

பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் படம் பார்த்த பின்னர் அது காட்சிப்படுத்தப்பட்ட விதத்தை அனைவரும் பாராட்டினர். இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் கங்கனா ரணாவத் நடிக்க இருப்பதாக

 செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் நடிக்கவில்லை என இப்பட உரிமையை வைத்துள்ள ஏ அண்ட் பி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

‛ஆடை’ படத்தின் அனைத்து மொழிக்கான ரீ-மேக் உரிமை எங்களிடம் உள்ளது. ஹிந்தியில் இப்படத்தை பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து எடுக்க உள்ளோம். 

இப்படம் இந்திய மொழி மட்டுமல்லாது சர்வதேச பார்வையாளர்களுக்கான கதை. ஹிந்தி ரீ-மேக்கில் கங்கனா நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எங்கள் நிறுவனம், 

கங்கனாவை நடிக்க வைக்க அணுகவில்லை. தயது செய்து வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ads
Radio
×