சம்மந்தன், சுமந்திரன் மீது மட்டும் ஏன்..? திருமதி காசி்பிள்ளை ஜெயவனிதாவுக்கு பகிரங்க மடல்..
தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அங்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களில் ஒருவா் தமிழரசு கட்சியினரை நோக்கி செருப்பை காட்டி கூச்சலிட்ட சம்ப வம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியிருக்கின்றது.
இந்நிலையில் செருப்பை காண்பித்த தாய்க்கு இளைஞன் ஒருவன் சமூக வலைத்தளதில் எழுதிய பகிரங்க மடலை இங்கே அப்படியே தருகிறோம்.
பகிரங்க மடல்தலைவிகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் அமைப்புவவுனியா மாவட்டம்.தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து தமக்கான தீர்வுக்காகப் பயணிப்பதற்காக தங்களைத் தலைவியாக
ஏற்றுக் கொண்டு செயற்பட்டு வருகின்றார்கள். நீங்களும் ஆரம்ப காலங்களில் மிகச் சிறப்பாகச் செயற்பட்டு அனைவரதும் உரிமைக்காக இயங்கி வந்தீர்கள்.காணாமல் போதல் என்பதின் வலியை நேரடியாக அனுபவித்தும் வருகின்றேன். எனது தந்தையும் கடந்த 2008ல் காணாமல் போனவர் தான்.
ஆகவே உங்களின் வேதனையை நன்கறிந்தவன் என்பதால் தங்களின் உணர்வினை நன்கு மதிக்கின்றேன். ஆனால் உங்களின் அத்துமீறிய செயற்பாடுகளால் அதிருப்தி அடைந்தே இந்த மடலை எழுதுகின்றேன்.குறிப்பிட்ட சில காலமாக சில அரசியல் தலைவர்களை மட்டுமே இலக்கு வைத்து
தங்களின் எதிர்ப்பை வெளியிடுகின்றீர்கள். குறிப்பாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள்(சம்மந்தன்,சுமந்திரன்) கூடும் இடங்களில் மாத்திரம் அவர்களை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு மாத்திரம் நீங்கள் செயற்படுவது ஏன்...?உங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகின்றது.நான் தெரியாமல் தான் கேட்கின்றேன்
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களா(சம்மந்தன்,சுமந்திரன்) தங்களின் உறவினர்களைக் கடத்தினார்கள். அவர்களைக் காணும் போது வருகின்ற கோபம் ஏன் அதற்குக் காரணமான மகிந்த, கோத்தா, நாமல் ஆகியோரைக் காணும் போதும் அவர்களுக்கு அடிவருடிகளாகச் செயற்பட்டு
எங்கள் உறவினர்களைக் காட்டிக் கொடுத்த சில வெள்ளை வேட்டிகளைக் காணும் போதும் வருவதில்லை?யாரின் ஏவலில் இப்படிச் செருப்புத் தூக்கிப் போராடுகின்றீர்கள்? அவர்கள் செல்லுமிடமெங்கும் சென்று அவமானப்படுத்துமாறு யார் பணம் தருகின்றார்கள்?
மகிந்த, கோத்தா, நாமல் வருகின்ற இடங்களுக்குச் செல்வதற்கு தங்களுப் பணம், சாப்பாடு தருவதில்லையா...??எனக்குச் சற்றுத் தெளிவுபடுத்துங்கள் அம்மா.
இங்ஙனம்
தங்களின் வலியை நன்கறிந்த
பூ.நிதர்ஷன்.
தெல்லிப்பளை கிழக்கு
யாழ்ப்பாணம்.
பதிவு : நிதர்சன் பூபாலன்