மொட்டுக்கு வாக்களித்தால் உங்கள் வீடுகளை தேடி வெள்ளை வாகனம் வரும்..! கிளிநொச்சியில் எச்சாித்தாா் ரணில்..

ஆசிரியர் - Editor I
மொட்டுக்கு வாக்களித்தால் உங்கள் வீடுகளை தேடி வெள்ளை வாகனம் வரும்..! கிளிநொச்சியில் எச்சாித்தாா் ரணில்..

வெள்ளை வாகனம் அற்ற ஜனநாயகமான நாட்டில் வாழ விரும்பினால் தமிழ் மக்கள் சஜித் பிறேமதாஸவுக்கு வாக்களிக்கவேண்டும். என பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் கூறியிருக்கின்றாா். 

இன்று 03-11-2019 கிளிநொச்சி பொது சந்தை வளாகத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில். தற்பொழுது நாட்டில் வெள்ளை வேன் வருவது கிடையாது, ஆனால் மக்களை தேடி அவசர அம்பூலன்ஸ் வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டுமா இல்லை என்பதனை 

மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மொட்டுக்கு வாக்களித்தால் வெள்ளை வேன் மட்டுமே வரும் எனத் தெரிவித்த பிரதமர்2015 க்கு பின்னர் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யலாம், ஊர்வலம் போகலாம், 

பேசலாம், எழுதலாம் இந்த நிலைமை தொடர வேண்டுமா? வேண்டாமா? நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் பலவற்றை உருவாக்கி சுதந்திரத்தை உருவாக்கியுள்ளோம் எனத் தெரிவித்த அவர்

2015க்கு பின் புதிய அரசியலமைப்பினை ஏற்படுத்த முயற்சித்த போதும் பாராளுமன்றத்தில் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமையினால் அதனை கொண்டுவர முடியாது போய்விட்டது. 

ஆனால் புதிய அரசிலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வை கொண்டுவர வேண்டுமானால் மக்கள் செய்ய வேண்டியது இரண்டு விடயங்கள்தான் ஒன்று வரும் 16 ஆம் திகதி அன்னத்திற்கு வாக்களித்து 

சஜித்தை ஜனாதிபதியாக்குவது, இரண்டாவது பாராளுமன்றத்தில் 120 க்கு மேறபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை எமக்கு வழங்குவது எனக் குறிப்பிட்ட பிரதமர்,கிளிநொச்சியை அபிவிருத்தியை செய்வதற்கு 

 நாம் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளோம் ஆனையிறவு உப்பளம் புனரமைத்தல், பூநகரியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் திட்டங்களை ஏற்படுத்துதல்,வடக்கு கிழக்கில் விசேட 

பொருளாதார திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், தொழில் வாய்ப்பினை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மேற்கொள்வோம் எனவும் குறிப்பிட்டார்.இக் கூட்டத்தில் அமைச்சர்களான 

ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்தன, ஹரிசன்,விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு